Saturday, December 24, 2011சென்னை: 1970 களில் சினிமா உலகையும், தமிழக அரசியல் உலகையும் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் ஆவார். 1977-ல் அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இதே தேதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயற்கையோடு கலந்து போனார்.
இன்று அவரது 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தார். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். எம்.ஜி.ஆர். தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும். எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும். சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் 24.12.1987 ல் மறைந்தார்...

அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 24-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை 10.45 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா வந்ததும் "புரட்சித் தலைவர் புகழ் வாழ்க", "புரட்சித்தலைவி வாழ்க" போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். அஞ்சலி செலுத்தியதும் நினைவிடத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு உறுதிமொழி ஏற்பும், மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.
எம்.ஜி.ஆரின் புகழ் பற்றி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப கூறி உறுதி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா மேடையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் இரட்டை விரலை காண்பித்தார். பதிலுக்கு தொண்டர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா காரில் புறப்பட்டு சென்றார். அங்கு கூட்டம் திரளாக இருந்ததால் மக்கள் வெள்ளத்தில் மிதந்த படி ஜெயலலிதா கார் மெதுவாக சென்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் விவரம்:-
அவைத் தலைவர் மது சூதனன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விசுவநாதன், கோகுல இந்திரா, கே.டி.பச்சைமால், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் விஜய், பி.வி.ரமணா, ராஜேந்திர பாலாஜி, மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் தம்பித்துரை, ரபிபெர்னாட், பாலகங்கா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், செம்மலை, மைத்ரேயன், ஓ.எஸ்.மணியன், மேயர்கள் சைதை துரைசாமி (சென்னை), செ.ம.வேலு சாமி (கோவை), துணை மேயர் பெஞ்சமின், அனைத் துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன். எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழன், கலைராஜன், கே.பி.கந்தன், வெற்றிவேல், குப்பன், ஜே.சி. டி.பிரபாகர், வாலாஜா பாத் கணேசன்.
முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன். நடிகர்கள் சிங்கமுத்து, ராமராஜன், சினிமா டைரக்டர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், தென்சென்னை மாவட்ட அவைத் தலைவர் கோதண்டராமர், கவிஞர் வீரைகறீம், புரசை கிருஷ்ணன், தென்றல்குமார், அம்பத்தூர் எம்.எல்.ஏ. வேதாச்சலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலம் ரவிச்சந்திரன், பாரதி மோகன், திருத்தணி அரி, நிலைக்குழு தலைவர்கள் முகமது அலிஜின்னா, லட்சுமி நாராயணன், மகிழன்பன்.
அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில துணைச் செயலாளர் பாண்டுரங்கன், டேவிட் ஞானசேகரன். கவுன்சிலர்கள் அலிகான் பஷீர், அமுதா வெங்கடேஷ், என்.எம்.பாஸ்கரன், தி.நகர் சத்யா, சிவராஜ் மற்றும் மூலக்கடை எம்.சக்தி, ஆவின் பாஸ்கர், ஷீலா பாஸ்கர், அம்பத்தூர் நகர செயலாளர் அலெக்சாண்டர், வக்கீல் எம்.ஆர்.இளங்கோவன், அண்ணாநகர் லட்சுமி நாராயணன், முகப்பேர் இளஞ் செழியன், காரப்பாக்கம் லியோ சுந்தரம், துரைப் பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, டி.சி.கருணா, மேட்டுக்குப்பம் பாஸ்கரன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, மயிலை ராஜேஷ்கண்ணா, சி.பி.அசோக்குமார், சைதை சி.எம்.சாமி, எஸ்.ஆர். விஜய குமார், அண்ணா நகர் என்.தயாளன், பேராசிரியர் ரவிசந்திரன், கே.புருஷோத் தமன், விருகை வேம்புலி.
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆர்.ராஜேந் திரபாபு, வீ.நாகராஜன், ஏ.என்.சுப்பிரமணி, கவுன்சிலர்கள் வக்கீல் டி.விஜயராமகிருஷ்ணா, பி.எஸ்.வாசன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.டி.சாம்சன், சிட்கோ சீனு, லண்டன் இளங்கோ, டாக்டர் இரா.கோவிந்தராஜூ, அனைத்து மாநகராட்சி- நகராட்சி அண்ணா பொது பணியாளர் சங்க செயலாளர் பெரம்பை சண்முகம்.
No comments:
Post a Comment