Saturday, December 24, 2011

மனித குலத்தின் மீட்சிக்காக உருவாக்கப்பட்ட நீதிச்சட்டங்களை சகல மக்களும் வேற்றுமையின்றி வாழ்வியல் நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்-டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 24, 2011
இலங்கை::மனித குலத்தின் மீட்சிக்காக உருவாக்கப்பட்ட நீதிச்சட்டங்களை சகல மக்களும் வேற்றுமையின்றி வாழ்வியல் நடைமுறையில் அனுபவிக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எமது நாட்டில் இரத்தப்பலிகளும், மனிதவதைகளும், கூக்குரல்களும், அழுகுரல்களுமே இங்கு எஞ்சியிருந்தன. இந்த அவலநிலையில் இருந்து எமது நாடு மீட்சி பெற்றிருக்கிறது. கடந்த கால அவலங்களின் எச்சங்களிலிருந்தும் எமது மக்கள் மீண்டெழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகையில்,

இனி நாம் அடைய வேண்டிய எமது அரசியலுரிமைக்காக பரிசுத்தமாகவும் சமாதான முறையிலும் ஏனையவர்களுடன் சேர்ந்துழைக்க வேண்டும்.

வெறும் வார்த்தைகளால் வன்முறைகளை மீண்டும் விதைக்கமால் இணக்கமான வழிமுறையில் தொடர்ந்து உரையாடல்களை நடத்துவதன் ஊடாகவே அடைய வேண்டிய சகல உரிமைகளையும் நாம் பெற முடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

நாம் வாழ்கின்ற எமது வரலாற்று வாழ்விடங்கள் யாவும் எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி என்ற உணர்வுகளோடும் சகல மக்களும் சமன் என்ற எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளோடும் மகிழ்ச்சி பொங்க வாழவேண்டும் என்று நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment