Sunday, December 11, 2011

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 47 பேர் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்!

Sunday, December 11, 2011
இலங்கை:.புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 47 பேர் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதற்கான உத்தியோகபூர்வ வைபவம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன வானகுரு குறிப்பிட்டார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் ஐந்து முன்னாள் பெண் போராளிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.

புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேராளிகளில் மேலும் 700 பேர் மாத்திரமே புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதுவரையில் சுமார் 10,300 முன்னாள் புலி போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சந்தன வானகுரு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment