Friday, December 9, 2011

இலங்கையில் இருந்து சென்று பிரித்தானியாவின், வடக்கு லண்டனில் தங்கி இருந்து குடும்பம் ஒன்றுக்கு 37 ஆயிரம் பவுன்கள் நட்டஈடு வழங்கப்படவுள்ளது!

Friday, December 09, 2011
பிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கைக் குடும்பம் ஒன்றுக்கு 37000 ஸ்ரலிங் பவுண்ட்களை நட்ட ஈடாக வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த இலங்கைக் குடும்பத்தினரை அந்நாட்டு அதிகாரிகள், ஜெர்மனிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

புகலிடம் கோருவோர் எந்த நாட்டிற்கு முதலில் பிரவேசிக்கின்றனரோ அந்த நாட்டிலேயே புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் செய்ய வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றிய நியதியின் அடிப்படையில் குறித்த குடும்பத்தினர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

எனினும், சட்டவிரோதமான முறையில் தம்மை நாட்டை விட்டு வெளியேற்றியதாகத் தெரிவித்து குறித்த இலங்கைக் குடும்பத்தினர் பிரித்தானிய நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் நிறைவில் குறித்த குடும்பத்தினருக்கு 37000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமெனவும், பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்கான பயண டிக்கட்டுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இலங்கைக் குடும்பத்தினர் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பது சட்ட ரீதியானதல்ல என்ற அதேவேளை, அவர்கள் வெளியேற்றப்பட்ட விதமும் தவாறானது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானிய அதிகாரிகள் நள்ளிரவு வேளையில் குறித்த குடும்பத்தினரை கைது செய்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகளின் உதவியை நாட அனுமதியளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளும் பெற்றோரும் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகின்றனர்.

இதேவேளை, நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள் நாட்டில் வசிப்பதற்கு அனுமதிக்க முடியாது என பிரித்தானிய சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

முதலில் புகலிடம் கோரிய நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நியதியின் அடிப்படையில் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இதில் எந்தவிதமான பிழையும் கிடையாது எனவும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பு பியைழான முன்னுதாரணத்தை வெளிப்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் பணத்தை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்குவது பொருத்தமானதல்ல என டோரி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரித்தீ பாட்டில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிர்வாக முறைமைகளில் உள்ள குறைபாடே இந்தத் தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாh.

2006ம் ஆண்டில் குறித்த இலங்கைக் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கு 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment