Friday, December 09, 2011முன்னாள் சட்ட மா அதிபரும், அரசாங்கத்தின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் மனித உரிமை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தகவல்களை திரட்டும் நோக்கில் மனித உரிமை ஆணைக்குழு மொஹான் பீரிஸிடம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடாபில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்நெலிகொட வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வருவதாக மொஹான் பீரிஸ் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுக் கூட்டமொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment