Tuesday, December 27, 2011

காலியில் 30 இலட்சம் ரூபா கொள்ளை!

Tuesday, December,27, 2011
இலங்கை::காலி கோட்டை பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிடுவதற்கு எடுத்துச் சென்ற 30 இலட்சம் ரூபாவை ஆயுதம் ஏந்திய ஒருவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணி அளவில் பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தை வழி மறித்த சந்தேகநபர் ஆயுத முனையில் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்ற சந்தேகநபர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை

No comments:

Post a Comment