Tuesday, December,27, 2011டெக்ஸாஸ்:அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான கிராப்வெய்னி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு குடிமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் நேற்று முன்தினம் (25) கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்தனர். இதற்காக வீடு முழுவதையும் அலங்கரித்து வைத்திருந்தனர்.
அப்போது அதிகாலையில், ´நத்தரார் தாத்தா´ வேடம்பூண்டு வந்த மர்ம மனிதன் வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் அவர்களை நோக்கி சரமாரியாக சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேரும் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினர். நான்கு பெண்கள், மூன்று ஆண்கள் என மொத்தம் 7 எழு பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர்.
இது குறித்து டல்லாஸ் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டிற்குள் வந்த மர்ம மனிதன், பலியான 7 பேருக்கும் தெரிந்த நபராகத்தான் இருக்க வேண்டும். தகராறில் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனரா,அல்லது முன்விரோதமா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இறந்தவர்கள் 15,19,22,55,56,58 மற்றும் 59 வயதுடையவர்களாக உள்ளனர். சம்பவ இடத்தில் மேலும் இரு துப்பாக்கிகள் கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment