Friday, December,30, 2011யங்கூன் : மியான்மர் நாட்டின் மிகப் பெரிய நகரமான யங்கூனில் அரசு ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான பெரிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ரசாயன பொருட்கள் மற்றும் சுரங்கத்துக்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த கிடங்கில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெடிமருந்துகள் ஆங்காங்கே பயங்கரச் சத்தத்துடன் வெடித்தன. இதனால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறினர். இந்த திடீர் வெடிவிபத்தில் சுவர்கள் இடிந்து விழுந்தன. கிடங்கு முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. கிடங்கு அருகில் உள்ள புத்த மடம் மற்றும் இதர கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன.
இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 108 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் தீயணைப்பு
No comments:
Post a Comment