Saturday, December 3, 2011

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக 1,300 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Saturday, December 03, 2011
புதுடில்லி : இலங்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக, 1,300 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே, கடந்தாண்டு இந்தியா வந்திருந்தபோது, அவரிடம், போரால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு, இந்தியா சார்பில், வீடுகள் கட்டித் தரப்படும் என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருந்தார். இதன்படி, போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், அவர்களின் பழையை வீடுகளை சீரமைத்துக் கொள்வதற்கும், மத்திய அரசு சார்பில், 1,319 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 49 ஆயிரம் வீடுகளுக்காக, இந்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதன்படி, பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை கட்டுவது, சீரமைப்பது ஆகிய பணிகளை, தாங்களாகவே மேற்கொள்ளலாம். இவர்களுக்கான நிதி, அவர்களின் வங்கி கணக்கில் போடப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment