Saturday, December 03, 2011அனைத்து இன மதங்களும் சமமாக மதிக்கப்படும் நாட்டில் அரசியல், மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது என பிரதமர் டி. எம். ஜயரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று மத அலுவல்கள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய பிரதமர், ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் சகல இன மத மக்களையும் சமமாக மதித்து சமமாக நிதியுதவிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரி வித்தார்.
பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் 42,660 பெளத்த பிக்குகளும் 1,113 இந்துக் குருக்களும், 3,964 இஸ்லாமிய மெளலவிமாரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே விதமாக கெளர விக்கப்படுவதுடன் அவர்களுக்கான சலுகைகளும் சமமாகவே வழங்கப் படுகின்றன.
இதனை உணர்ந்து கொள்ளாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதில்லை என இந்த சபையில் கூறுகிறார். இது முற்றிலும் தவறானது. சகலரும் தத்தமது மதத்தினை வழிபடுவதற்கான உரிமை இருக்க வேண்டும். அதேநேரம் ஏனைய மதங்களையும் மதித்து நடக்க வேண்டியது முக்கியம்.
இந்து மதமும் பெளத்த மதமும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட மதங்களாகும். எனது பிரதேசத்தில் பெளத்த மக்கள் பெரும்பாலும் வாழ்கின்ற பகுதியில் இந்து கோவில்களும் உள்ளன. அவை பெளத்த மக்களால் பாதுக்காக்கப்படுகின்றன.
ஏனைய நாடுகளைப் பார்க்கும் போது எமது நாட்டில் இன, மத, ஐக்கியம் சிறப்பாகவுள்ளன.
நான் அண்மையில் வடக்கிற்குச் சென்று 140 இந்துக் கோயில்களுக்கு நிதியுதவி வழங்கினேன். எந்த மதம், இனம் என்றில்லாமல் சகல அறநெறிப் பாடாலைகளுக்கும் ஒரே விதமான சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment