Tuesday, November 01, 2011COLOMBO: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக டெலோ இயக்கம் (தமிழ் ஈழ விடுதலை இயக்கம்) எதிர்வரும் 06 ஆம் திகதி திருமலையில் கூடுகிறது. இதன்போது சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுமென இந்த இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி,(சுரேஷ் அணி) டெலோ ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தங்களைப் புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்த சிவாஜிலிங்கம், இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்ற வரும் 12 கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது தங்களுக்கும் இடமளிக்காமை, அமெரிக்க விஜயத்தில் தமது கட்சிப் பிரதிநிதிகளைச் சோத்துக் கொள்ளாமை தொடர்பில் ஆறாம் திகதி நடைபெறும் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் கூறினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும்போது அதனை எவ்வாறு கையாள்வது? எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவது என்பது தொடர்பில் திருமலைக் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் எமக்குத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment