Tuesday, November 01, 2011
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் பெஷாவர் நகரில் உள்ளது கோர் காத்ரி. இங்கு 160 ஆண்டு பழமையான கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்திய - பாக் பிரிவினைக்கு பின் மூடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக கோயில் மூடியே கிடந்தது. இந்தக் கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி பூல்வதி, இவரது மகன் கக்கா ராம் ஆகியோர் பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவர்கள் தாக்கல் செய்த மனுவில், ÔÔகோரக்நாத் கோயில் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது.
அந்த கோயில் பல ஆண்டுகளாக போலீஸ் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, கோயிலை திறந்து நிர்வகிக்க உத்தரவிட வேண்டும்ÕÕ என்று கோரியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், Ôபூல்வதியின் குடும்பத்துக்கு கோயில் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனினும், மதரீதியான நடவடிக்கைகளை தடுப்பது சட்டப்படி தவறு. எனவே, வழிபாடு நடத்த கோயிலை திறக்க வேண்டும்Õ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து 60 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியன்று கோயில் திறக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமான இந்துக்கள் கோயிலில் உற்சாகமாக தீபாவளி கொண்டாடி பிரார்த்தனை செய்தனர். கோயிலை திறக்க உதவிய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பூல்வதியின் மகள் கமலா ராணி மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment