Tuesday, November 01, 2011COLOMBO: மாலைதீவுக்கு இலங்கையில் இருந்து பெண்களை விபசாரத்திற்காக அனுப்பும் மோசடி நடவடிக்கை தொடர்பில் மிரிஹான பொலிஸார் தகவல்களை திரட்டியுள்ளனர்.
கொட்டாவ பன்னிபிட்டிய பகுதியில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதன் பின்னர் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த பெண்ணினால் இலங்கைப் பெண்கள் கடந்த சில மாதங்களாக மாலைதீவுக்கு அனுப்பப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
No comments:
Post a Comment