Thursday, November 10, 2011

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்ட கையோடு அதன் பிரதிகளை அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் கையளிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது!

Thursday, November 10, 2011
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்ட கையோடு அதன் பிரதிகளை அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் கையளிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிச் சண்டையில் இடம்பெற்றன எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்திவரும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்த கையோடு அதனை அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் முதலில் கையளித்து, அவர்களின் பார்வைக்கு உட்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த ஆவணக் கையளிப்பு இடம்பெறும் என அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனிடம் கையளிப்பதா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment