Thursday, November 10, 2011

அரசாங்க அதிபர்கள் பலர் இடமாற்றம்!

Thursday, November 10, 2011
உடனடியாக அமுலாகும் வகையில், பல மாவட்டங்களுக்கு புதிய அரசாங்க அதிபர்கள் நியமிக்க அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ பி அபேகோன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதனடிப்படையில் மூன்று அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், நான்கு அரசாங்க அதிபர்கள் வேறு மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதன் மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய இடத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மன்னார் மாவட்டத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் பணியாற்றிய சரத் ரவீந்திர அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அம்பாறை, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த அரசாங்க அதிபர்களின் இடமாற்றத்தை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்.

No comments:

Post a Comment