Thursday, November 10, 20112018 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கென 272 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், 2018 ஆம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த போட்டிக்கு 272.77 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த செலவில் 75 வீதம் தனியாரிடமிருந்து நன்கொடையாக பெற்றுக்கொள்ளப்படும்.
போட்டியை நடத்துவது தொடர்பில் 2011.11.11 அன்று நடைபெறும். வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக விளையாட்டுதுறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருக்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டியை இங்கு நடத்துவதன் மூலம் எமது நாட்டின் பெயர் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடையும் என்றார்.
No comments:
Post a Comment