சிறந்த வீதிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் பிரிவினைவாத உணர்வுகள் களையப்படும்:அடுத்த இலக்கு யாழ்ப்பாணத்திற்கான அதிவேக வீதியே-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ! 

Sunday, November 27, 2011
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையே அதிவேக வீதியை நிர்மாணிப்பதே அரஙசாங்கத்தின் அடுத்த இலக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முதலாவது அதிவேக மார்க்கமான தெற்கு அதிவேக வீதியை திறந்துவைப்பதற்காக இன்று நண்பகல் காலியில் நடைபெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாட்டை உருவாக்குவதற்கான வீதிகள் அபிவிருத்தி எடுத்துக்காட்டுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்..
கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேக பெருந்தெருவை மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த வீதிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் பிரிவினைவாத உணர்வுகள் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment