Sunday, November 27, 2011லண்டன், : ஆசியாவில் மிகவும் கவர்ச்சியான பெண்ணாக கரீனா கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக ‘கிளாமர் குயினாகÕ திகழ்ந்த நடிகை கத்ரினா கைப் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
லண்டனிலிருந்து வெளியாகும் ‘ஈஸ்டர்ன் ஐÕ வார இதழ் ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் மூலம் ஆசிய பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார்? என்ற ஆய்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்வில் ‘பாடிகார்ட்Õ மற்றும் ‘ரா ஓன்Õ ஆகிய மெகா ஹிட் படங்களில் நடித்த கரீனா மற்றவர்களை விட ஒரே ஒரு சதவீத ஓட்டு அதிகம் பெற்று ஆசிய பெண்களிலேயே மிகவும் கவர்ச்சியானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் கவர்ச்சி பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகை கத்ரினா கைப், 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.இது குறித்து ‘ஈஸ்டர்ன் ஐÕ வார இதழ் ஆசிரியர் அஸ்ஜாத் நஸீர் கூறுகையில், ÔÔகரீனா, கத்ரினா இடையே கடும் போட்டி நிலவியது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்கள் இருவரும் பாலிவுட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள்ÕÕ என்றார்.
பிரியங்கா சோப்ரா 3வது இடமும், பிபாஷா பாசு 4வது இடத்தையும், பிரிடா பின்டோ 5வது இடத்தையும், ஐஸ்வர்யாராய் 6வது இடத்தையும், தீபிகா படுகோனே 7 வது இடத்தையும், சோனம் கபூர் 9வது இடத்தையும் பிடித்தனர். புதுமுகங்களில் ஹிருத்திக் ரோஷன் மனைவி சூஸன் அதிக ஓட்டுக்களை பெற்று 16வது இடத்தில் இருந்தார். இவர்கள் தவிர முதன்முதலாக போட்டிக்குள் நுழைந்த ஜாக்குலின் பெர்னான்டஸ் 12வது இடத்தையும், நர்கீஸ் பக்ரி 23வது இடத்தையும், சோனக்ஷி சின்கா 38வது இடத்தையும் பெற்றனர்.
லாரா தத்தா 15வது இடத்தையும், மாலாய்கா அரோராகான் 19வது இடத்தையும் விடித்தனர்.
No comments:
Post a Comment