Sunday, November 27, 2011

கூட்டமைப்பிற்கும் அகாஸிக்கும் இடையில் 29ஆம் திகதி காலை 11 மணிக்கு கொழும்பில் சந்திப்பு!

Sunday, November 27, 2011
கூட்டமைப்பிற்கும் அகாஸிக்கும் இடையில் சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளாதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த சந்திப்பு எதிர்வரும் 29ஆம் திகதி காலை 11 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளதாவும் இதற்கான முறையான அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

No comments:

Post a Comment