Sunday, November 27, 2011உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முதலில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கைப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2010ம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதியினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.டி சில்வா தலைமையிலான ஆணைக்குழுவினால் சுமார் 400 பக்க இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment