File:Photo
Sunday, November 27, 2011
யாழ் பல்கலைக்கழக முன்றலில் புலிகளின் மாவீரர் தீபம் ஏற்றியதனை அடுத்து ராணுவத்தினரும் காவற்துறையினரும் குவிப்பு!
யாழ் பல்கலைக்கழக முன்றலில் புலிகளின் மாவீரர் தீபம் ஏற்றியதனை அடுத்து அங்கு ராணுவத்தினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர் விடுதிக் காவலாளிகள் தாக்கப்பட்டதாகப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக் கழக மாணவர் விடுதியில் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் (புலி)மாணவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகத்தில் பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment