Monday, November 28, 2011சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 53 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது. 380 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 603 பேர் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தற்காடலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச் சீரற்ற காலநிலையால் இதுவரை 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொறட்டுவ பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் சென்ற மீனவர் மோதரை கடற்பரப்பில் அலையில் மோதுண்டு படகு கவிழ்ந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மீனவருடன் மேலும் ஆறு மீனவர்கள் மொறட்டுவ பகுதியில் இருந்து கடலுக்குச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்ளில் இன்றும் சில இடங்களில் மழை பெய்ததாகவும், எனினும் கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளநீர் வடிந்தோடி வருவதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் பருவப்பெயர்ச்சி வானிலையால் கிரான், செஙகலடி, வவுணதீவு, வெல்லாவெளி, பட்டிப்பளை, மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களில் 50 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கடும் மழை ஒரளவு ஓய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை திருகோணமலையில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த மழை குறைவடைந்துள்ளது. மூதூர், கட்டைப்பறிச்சான், சாந்திநகர், சமபூர், ஆலங்கேணி, வரோதயநகர், தம்பலகாமம், கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் படிப்படியாக வடிந்தோடி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment