Sunday, November 20, 2011

கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையில் ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட (புலி) சீமான்?:சேவை ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன!

Sunday, November 20, 2011
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையில் ஆரம்பிக்கப்படும் கப்பல் சேவை ஆறு மாதங்கள் தொடருமானால் தான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்குமரம் கட்டி அதில் தொங்கித் தற்கொலை செய்வேன் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான (புலி) சீமான் இந்திய ஊடகங்களில் சவால் விட்டிருந்தார்.

இன்று அக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஆறு மாதங்கள் கடந்து விட்டது. இந்நிலையில் (புலி) சீமான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாரா என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சவால்கள் விடுவதில் வீரரான சீமான் இதுபோன்று பல வாய்ச்சவடாக்களை முன்னரும் விட்டுள்ளார். எனினும் எதனையும் அவர் நிறைவேற்றியதில்லை.

அதனாலேயே அவருக்கு இவ்விடயத்தை குறும்புக்காக ஞாபகப்படுத்தினோம் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறந்தேனும் ஒரு உயிரைக் காவு கொள்ள ஒருபோதும் நாம் உடந்தையாக இருக்கமாட்டோம் என்றும் இனிமேலாவது சவால் விடும்போது சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமானின் ஆறு மாதத்திற்கு முன்னரான இச் சவால் விட்ட செய்தியை இலங்கையில் தாமே முன்னணிப் பத்திரிகைகள் எனத் தமக்குத் தாமே மகுடம் சூடிக்கொள்ளும் பத்திரிகைகள் சிலவும் வீரவசனத் தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment