Saturday, November 19, 2011கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கருதியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்திற்கும் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாஸ் இந்தத் தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நியாயமான மற்றும் n;தாழில்சார் தகுதியுடைய ஓர் அரசியல்வாதி எனவும் அவரே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருக்க வேண்டுமெனவும் கோதபாய கருதியதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு அஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது என ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் தெரிவிதததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் இராணுவத் தளபதி வன்முறைகளை தூண்டும் நடவடிக்கைகளில் வருவதாக தாம் ரணிலிடம் கூறியதாக அவர் குறிப்பிடடு;ள்ளார்.
அந்த நடவடிக்கைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும், பொன்சேகாவும் ஜே.வி.பியுமே அவற்றுக்கு பொறுப்பு எனவும் ரணில், தம்மிடம் தெரிவித்ததாக கோதபாய குறிப்பிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
ஐ.தே.க – ஜே.வி.பி கூட்டணி வெற்றியடையாது என நம்புவதாக கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டதாக அமெரிக்கத் தூதரகம், ராஜாங்கத் திணைக்களத்திற்கு குறிப்பு அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வந்த, இரு வேறு கொள்கைகள் உடைய கட்சிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜே.வி.பி கட்சி மிகவும் ஆபத்தானது என கோதபாய எச்சரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment