Saturday, November 19, 2011

18 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையில் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளது-பசில் ராஜபக்ஷ!

Saturday, November 19, 2011
18 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையில் தமது சேவைகளை ஆரம்பித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் சர்வதேச ஒத்துழைப்புகள் தொடர்பான பிரதியமைச்சர் இப்ராஹிம் இஸ்மையில் இப்ராஹிம் கடந்த 17 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் தன்னை சந்தித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளை விரிவுப்படுத்துவது தொடர்பில் ஆராய இரண்டு தரப்பினரும் இணங்கியுள்ளனர். சுற்றுலாத்துறையை மேன்படுத்துவதன் மூலம் இரண்டு நாடுகளும் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்க பிரதியமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.

No comments:

Post a Comment