Saturday, November 19, 2011தற்போது புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு இந்த வருடம் இறுதிக்குள் அனைத்து புனர்வாழ்வு நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்படுமென புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல்.எல்.டபிள்யூ.சி.பீ.பீ ராஜகுரு தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழுவொன்றுடன் வன்னி பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்னி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது பெற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், தென்னாபிரிக்க பிரதிநிதிகள் குழுவினருக்கு தெளிவுபடுத்தினார்.
No comments:
Post a Comment