Sunday, November 20, 2011

தனது இருப்பை வலுப்படுத்துவதற்காகவே வெளிநாடுகளுக்கு கூட்டமைப்பு விஜயம்-பிரபா கணேசன்!

Sunday, November 20, 2011
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையிலே அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் முதலிய நாடுகளுக்கு விஜயம் செய்தது பற்றி என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்:- அவர்களது விஜயத்தின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களைத் திருப்திப்படுத்துவதுதான். புலம்பெயர் மக்கள் வடபுலத்தின் வாக்குகள் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். வட புலத்தில் தற்போது வாழும் மக்களின் உறவினர்களே வெளிநாட்டில் வாழ்கின்றார்கள். வடபுலத்தின் தேர்தல்களில் அளிக்கப்படும் வாக்குகள் வெளியில் வாழ்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே தான் புலம்பெயர் மக்களைத் திருப்திப்படுத்தித் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தவே அவர்கள் விஜயம் செய்திருக்கலாம். அவர்களது விஜயத்தின் போது செயலாளர் நாயகத்தையோ உதவிச் செயலாளர் நாயகத்தையோ அவர்களால் சந்திக்க முடியவில்லை. இந்த விஜயம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை என்பதனையே இது காட்டுகின்றது.

கேள்வி:- இவர்களது விஜயம் எஞ்சியிருக்கும் புலி ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே என்று நினைக்கின்aர்.

பதில்:- ஆம். புலம்பெயர்ந்து வாழ்வோருள் புலி ஆதரவாளர்கள் உள்ளனர். புலி இயக்கம் மீள உயிர்ப்பெற வேண்டுமென்பதே அவர்கள் எண்ணம். ஆயுத முனைப் போராட்டத்துக்கல்ல. வேறுவகையாகப் புலிகளின் அபிலாஷைகளை அடைய றினைக்கிறார்கள். இலங்கை அரசை எவ்வகையிலும் இழப்புவது அவர்களது நோக்கம். வட புலமக்கள் இன்று அரசின் அபிவிருத்திப் பணிகண்டு திருப்தியடைந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். அந்த மக்கள் படிப்படியாகத் தமிழ்க்கூட்டமைப்பின் தொடர்பில் இருந்து தங்களை விடுவித்து வருகிறார்கள். தமிழ்க் கூட்டமைப்புக்கு இருந்த அடக்கியாளும் சக்தி குறைந்து வருகின்றது. சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் த. தே. கூ. 124,764 வாக்குகளைப் பெற்றது. இந்த விபரப்படி 36 சதவீத தமிழ் மக்கள் த. தே. கூட்டமைப்புக்கு ஆதரவாக இல்லை. அக்கட்சியின் கோட்டையாகவிருந்த யாழ். மாவட்டத்தில் அவர்களுக்கிருந்த செல்வாக்குக் குறைந்துள்ளது. எனவே ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் அவர்கள் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். அவர்களது கொள்கைகளைத் தமிழ் மக்களுள் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபுலத் தமிழ் மக்கள் இழந்த இயல்பு வாழ்வை மீளமைக்கவும், அழிந்த கட்டிடங்களை புனரமைக்கவும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வாழ்க்கையை வளப்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளைச் செய்யவும் விருப்பத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். வெறுக்கப்பட வேண்டிய கொள்கைகளில் அவர்களுக்கு நாட்டமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீர்குலைந்து வருகின்றது. அதனால் தாம் இழந்த பெருமையை மீண்டும் பெறப் புலம்பெயர் மக்கள் மூலம் இங்குள்ள தமிழ் மக்களின் செல்வாக்கைப்பெற முயலுகின்றனர். ஐரோப்பாவின் ஏனைய தேசங்களுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் விஜயம் செய்து செல்வாக்கைப்பெற முயலுகின்றார்கள்.

இறுதிப் போரில் 40,000 பேர் பலியானதாக தருஷ்மன் அறிக்கை கூறுகிறது. இது உண்மையென நம்புவதற்கில்லை. சர்வதேச ரீதியாக யாரும் இத்தகைய கதையைக் கூறவில்லை. ஐ.நாவும் நோர்வேயும் தம்மைக் காப்பாற்றும் என்று பிரபாகரன் எண்ணினார். ஆனால் அது கனவாகியது. கூட்டமைப்பு வெளிநாட்டு அரசுகளுக்குப் பின்னால் செல்கின்றது. இது பயனற்றது மட்டுமல்ல. நமது நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். உள்நாட்டிலேயே ஒரு தீர்வு முயற்சிக்கு ஒத்துழைப்பதே சிறந்தது.

கேள்வி:- வெளிவிவகார அமைச்சர் பேராசியர் பீரிஸ் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதே கருத்தையே கூறினார். நமது நாட்டுப் பிரச்சினையை நமக்குள்ளேயே தீர்க்க வேண்டும். வெளிநாடு செல்வதால் விளையும் பயன் ஏதுமில்லை என்றாரே?

பதில்:- ஆம். அவர்களது விஜயம் வாக்கு வங்கியை அதிகரித்து ஸ்திரப்படுத்தவே தவிர தமிழ் மக்களின் தேவைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கல்ல என்பதே எனது கருத்தாகும். அமைச்சர் பீரிஸின் கூற்று மிகப் பொருத்தமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினையில் புலிகள் காட்டிய அக்கறையை விடக் குறைவான அக்கறையுடன் செயல்படுவதாக அமைச்சர் பசில் அண்மையில் கூறிய கூற்றையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

கேள்வி:- இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் பற்றி நீங்கள் அடிக்கடி பேசுவதைக் கேட்கிறோம் அது பற்றி?

பதில்:- போர்க்கால சூழலிலே வடக்கையும் கிழக்கையும் தவர்த்தே குடிசன மதிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு குடிசன மதிப்பு புள்ளி விபரப்படி, 1.6 மில்லியன் இந்திய வம்சாவளியினர் இங்குள்ளனர். 150,000 மக்கள் வடக்கு கிழக்கில் உள்ளனர். இதன்படி இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய தமிழ் மக்களைவிட அதிகமாக உள்ளனர். இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையினராக உள்ளனர். அரசியல் தீர்வு முயற்சியிலே இந்திய வம்சாவளியினரும் உள்Zர்க்கப்பட வேண்டுமென்பதற்கு இது பொருத்தமான காரணம் அல்லவா? தற்போது கூட்டமைப்பு மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றது. ஏனைய தமிழ்க் கட்சித் தலைமைகளும் முஸ்லிம்களும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் உண்மையான தீர்வை எட்டமுடியும். மலையகக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டமான், திகாம்பரம், இராதா கிருஷ்ணன் போன்றவர்களும் பேச்சுவார்த்தையில் உள்Zர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அமையும் போதுதான் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் உருவாகும். இன்றேல் அதன் பயன் குறைவுதான்.

கேள்வி:- அரசுடனான பேச்சில் எதுவித முன்னேற்றமும் இல்லையென அரசின் மீது குறை கூறுகிறதே?

பதில்:- இது தொடர்பாக கூட்டமைப்பிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். அக்கட்சி இதுவரை எவ்வாறான தீர்வுத்திட்டத்தையும் முன்வைத்துள்ளதா? இல்லை. அவர்கள் தீர்வு தொடர்பாக எதையும் முன்மொழியவில்லை. சாதாரணமாக பேச்சில் பங்குபற்றுகிறார்கள். தமிழ் மக்களின் உண்மையான தேவைகள், அபிலாஷைகளை முன்வைக்கவில்லை. இது தேநீர் விருந்து போல நடைபெறுகிறது.

கேள்வி:- ஆனால் அரசுதான் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பான கூற்றை முன்வைக்க வேண்டும். அதற்கான திருத்தங்களைத் தாம் கூறுவோம் என்று கூட்டமைப்பு கூறுகிறதே.

பதில்:- அது முற்றிலும் பிழையானது. பசித்தவன் தான், தான் எதை எண்ண வேண்டுமெனத் தீர்மானிக்க வேண்டும். அவனது தேவையைத் தீர்மானிக்கும் நீதிபதி அவன்தான். கூட்டமைப்பு தன் தேவையை முன்வைக்க வேண்டும். அதை விடுத்து வேறு விதமாகச் செயல்படுவது நன்மை அளிக்காது. தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பாக அக்கட்சிக்கு அதிக அக்கறை இல்லை. விஷயங்களைக் குழப்பியடித்துத் தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்தி தமிழ்த்தேசிய வாதத்தை உருவாக்குவதுதான் அவர்களது போக்கு. தமிழ் மக்கள் தமது பிரதேசம் அபிவிருத்தி காணவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

முன்னரெல்லாம் அரச திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளாகத் தமிழ் மக்களே இருந்தார்கள். வடபுலத்தில் கல்வித்துறையில் சிறந்துவிளங்கிய அறிஞர் பெருமக்கள் வாழ்ந்தார்கள். பாழாய்ப்போன இனப்பிரச்சினையால் எல்லாம் மாற்றமடைந்தன. நமது பாடசாலைகளை அபவிருத்தி செய்ய அரசுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும். கூட்டமைப்புக்கு அபிவிருத்தியில் அக்கறை இல்லை.

கேள்வி:- கூட்டமைப்பு பற்றி என்னதான் விமர்சனம் எழுந்த போதும் வடக்கு- கிழக்கில் அக்கட்சிதானே கோலோச்சுகின்றது?

பதில்:- அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உரிமைபற்றிப் பேசலாம். ஆனால் யாரும் தமிழ்த் தேசியவாதத்தைக் கொண்டு வாழ முடியாது. இந்த நாட்டில் நாம் 16 சத வீதத்தவர். சிங்கள மக்களோ 76 சத வீதத்தவர். சிங்கள மக்கள் தேசியவாதமும் இனவாதமும் பேசினால் என்னவாகும் என்பதை நினைக்க வேண்டும். நாங்கள் தவறான பாதையில் செல்லக்கூடாது. தமிழ்க் கூட்டமைப்பு கொழும்புத் தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து மனோ கணேசனுக்கு கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வாக்குச் சேர்த்தார்கள். அவர்களது தேர்தல் உபாயம் தமிழ்த் தேசியவாதமே. அதுபோல யாழ். மக்களைக் கட்டாயப்படுத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் சொன்னார்கள். தமிழரின் ஒற்றுமையைச் சர்வதேச சமூகத்துக்கு காட்ட வேண்டுமென்று சொன்னார்கள். இது முழுப் பொய்யான காரணம். ஒரு மாநகரசபைத் தேர்தலில் வாக்குப் பெற்றுச் சர்வதேச சமூகத்துக்கு எதைக் காட்ட முடியும்.

கேள்வி:- அதிகாரப் பகிர்வுக்கான பேச்சுவார்த்தையில் இந்திய வம்சாவளியினரையும் உள்ளடக்க வேண்டுமெனக் கூறுகின்aர்களா?

பதில்:- ஆரம்ப கட்டங்களில் புலி அமைப்பினர் எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவர் என எல்லோரும் நம்பினர். இந்திய வம்சாவளியினரும் அவ்வாறே நம்பினர். ஆயினும் புலிகளின் விட்டுக்கொடுப்பற்ற பிடிவாதப் போக்கால், ஜனநாயக வழியில் பெற்றெடுத்த உரிமைகளையும் இழக்க நேர்ந்தது. இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பாக வேறு யாரும் எமக்கு உதவுவார்கள் என்று நாம் நம்புவதற்கில்லை. கூட்டமைப்புடன் நடைபெறும் பேச்சில் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டுமென்பதை நான் வலியுறுத்தி வருகிறேன்.

No comments:

Post a Comment