Tuesday, November 15, 2011
ராமநாதபுரம் : இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் எதிரொலியால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள், பிழைப்பு தேடி, வெளி மாநிலங்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
இதனால், கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கு செல்கின்றனர். அங்கு, குறைந்தது இரண்டு மாதம் முதல் மூன்று மாதம் வரை தங்கியிருந்து, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முறை சென்று வரும் போது, இரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கூறியதாவது: இலங்கை கடற்படை தாக்குதலால், கர்நாடக மாநிலம் மங்களூருக்கு மீன் பிடிக்கச் செல்கிறேன். அங்கு ஒரு முறை மீன் பிடிக்கச் சென்றால், 10 நாட்கள் கழித்து தான் திரும்பி வருவோம். அங்குள்ள நவீன படகுகளில், உணவு உட்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment