Tuesday, November 15, 2011
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரண்டு குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
விஞ்ஞான பீடத்தின் நுழைவாயிலுக்கு அண்மையில் நேற்றிரவு ஏழு மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கேஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
இதன்போது மாணவர்கள் சிலர் காயமடைந்ததுடன் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இது பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என உப வேந்தர் குறிப்பிட்டார்.
மாணவர்களைத் தாக்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், பேராசிரியர் கேஷினிக்கா ஹரிம்புரேகம மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment