Tuesday, November 15, 2011
இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்று இலங்கை கடல்பிராந்தியத்தில் மீன் பிடித்த இந்திய மீனவர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மண்டபம் விசைப்படகு மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை பகுதிக்குச் சென்றதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படையினர் எல்லை தாண்டிச் செல்லும் விசைப்படகுகள் குறித்து, சர்வதேச கடல் எல்லையில் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் 7ம் திகதி வரை நான்கு நாட்களில், எல்லை தாண்டிய விசைப்படகுகள் குறித்து மீன்பிடித் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
மண்டபம் மீன்பிடித் துறை துணை இயக்குனர் சிவராமன் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், இந்திய கடல் எல்லையைத் தாண்டுவதால், மீனவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிட்டார்.
முதன் முறையாக எல்லை தாண்டிய விசைப்படகுகளுக்கு ஆயிரம் இந்திய ரூபாய்களும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டியதற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்களும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சிவராமன் தெரிவித்தார்.
இதன் மூலம் எல்லை தாண்டிச் செல்லும் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

No comments:
Post a Comment