Tuesday, November 15, 2011

யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறையலாம்-இலங்கையின் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

Tuesday, November 15, 2011
யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் குறையலாம். ஏனெனில் யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து 41ஆயிரத்து 750 பேர் இந்த வருடம் நீக்கப்படவுள்ளனர். இந்த தகவலை இலங்கையின் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்வதற்காக சென்றுள்ளமையே இதற்கான காரணமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 816,005 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 485,791 ஆக குறைந்தது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ல் இருந்து 6 ஆக குறைந்தது.

இந்தநிலையில் 41,750 வாக்காளர்;கள் மீண்டும் குறைந்துள்ளமையால் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்று தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2011 ஆண்டின் வாக்காளர் யாழ்ப்பாண வாக்காளர் பட்டியலில் 16,990 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment