Tuesday, November 15, 2011
சென்னை : இலங்கைக்கு, சென்னை ஐ.சி.எப்.,பிலிருந்து ரயில் பெட்டிகள் தயாரித்து, அனுப்பி வைக்கப்படுகின்றன. இலங்கைக்கு, சென்னை ஐ.சி.எப்.,பில், 100 கோடி ரூபாய் செலவில், 120 ரயில் பெட்டிகள், நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதம் வரை, 9 ரயில்களுக்கான ரயில் பெட்டிகள், சென்னையிலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று 10வதாக, ஒரு ரயிலுக்கான ஆறு பெட்டிகள், ஐ.சி.எப்.,பிலிருந்து கொண்டுவரப்பட்டு, கப்பலில் அனுப்புவதற்காக, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள், இலங்கைக்கு இரு தினங்களில், கப்பல் வழியாக அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment