Tuesday, November 15, 2011வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த சந்தேகநபர்கள் வவுனியா கந்தசாமி நகர் பகுதியில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்களிடமிருந்த கைக்குண்டும், கொள்ளையிடப்பட்ட சில நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment