Friday, November 4, 2011

இரண்டாயிரத்து நூறு குடும்பங்களே மீள் குடியேறவுள்ளன: அரசாங்கம்!


Friday, November 04, 2011
வடபகுதியில் மேலும் சுமார் இரண்டாயிரத்து நூறு குடும்பங்களே மீள் குடியேறவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

செட்டிக்குளம் ஆனந்த குமாரசுவாமி மற்றும் கதிர்காமர் நலன்புரி கிராமங்களில் இவர்கள் தற்போது தங்கியிருப்பதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணர்தன வீரகோன் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் பொருட்டு கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், அதுவரை இந்த மக்களை தங்கவைப்பதற்காக கொம்பாவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சுமார் 600 ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொம்பாவில் பிரதேசத்தில் தலா 4 பேர்ச் வீதம் ஆயிரம் காணி துண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சுமார் 200 குடும்பங்களை அந்த பிரதேசத்தில் மீள குடியேற்றத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டு செட்டிக்குளம் நலன்புரி கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ்சிய மக்களையும் மிக விரைவில் மீள்குடியேற்றவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment