Friday, November 4, 2011

(புலிகளின்)கூட்டமைப்பு போர்க் குற்றச்சாட்டுக்களை கைவிட்டுவிடுமானால் அது அரசியல் தந்கொலை ஒன்றை செய்து கொண்டுவிட்டதாகவே அர்த்தம் என்கிறார்- சி.சிறீதரன்!



Friday, November 04, 2011
தமிழ்தேசியக் (புலி)கூட்டமைப்பு போர்க் குற்றச்சாட்டுக்களை கைவிட்டுவிடுமானால் அது அரசியல் தந்கொலை ஒன்றை செய்து கொண்டுவிட்டதாகவே அர்த்தம் என்கிறார் அக்கட்சியின் (புலிகளின்)நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.
தமிழ்தேசியக் (புலி)கூட்டமைப்பு போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிட்டு விட்டது என்பதில் எந்த விதமான உண்மையும் கிடையாது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டை (புலி)கூட்டமைப்பு எடுக்காது என்பதை கட்சியின் தலைவர் இரா.சம்பந்தர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பதற்கப்பால், இந்த மண்ணில் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.சர்வதேச ரீதியில் அது உறுதிப்படுத்தப்படவேண்டும்,

அதன் மூலம் தமிழர்களை ஆளும் தகுதியை சிங்கள ஆட்சியாளர்கள் இழந்து விட்டனர் என்ற உண்மை இந்த உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழர்கள்(புலிகள்) தம்மைத்தாம் ஆளும் தன்னாட்சி உரிமை கொண்டவர்களாகவேண்டும், இந்த நோக்கத்திலேயே போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் நகர்வுகள் இருக்கும், என தமிழ்தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை நல்லூரிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில், உண்மையில் போர்க்குற்றச்சாட்டை நாம் கைவிட்டவர்கள், புறக்கணிப்பவர்கள் என்பதெல்லாம் முற்றுமுளுதாக கட்டப்பட்ட கதைகள், ஆனால் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் (புலி)கூட்டமைப்பின் அணுகு முறைகள் வித்தியாசமானவை. என்னுடைய கணிப்பின் படி நான் 2008காலப்பகுதியினில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இருந்தபோது, புள்ளி விபரங்கள் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 59ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாக கூறப்பட்டது. எனவே இரண்டு இலட்சம் வரையான மக்கள்; இருந்திருக்கிறார்கள.; இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திலும்,வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வடமராட்சி கிழக்கு, போன்ற பகுதிகளிலுமாக என சுமார் 5லட்சம் வரையான மக்கள் அங்கிருந்திருக்கவேண்டும்.

ஆனால் வவுனியா முகாமிற்குச்சென்றிருந்த மக்கள், 3இலட்சத்தி 25ஆயிரம் வரையான மக்களே, எனவே மிகுதி 1இலட்சத்தி 80ஆயிரம் மக்களுக்கு என்ன நடந்தது? ஏற்கனவே 70ஆயிரம் வரையான மக்களே யுத்த வலயத்திற்குள் உள்ளடங்கியிருப்பதாக அரசாங்கம் கூறி வந்திருந்தது. எனவே ஒரு இலட்சத்தி 80ஆயிரம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூறியே ஆகவேண்டும். எனவே இந்த நாட்டில் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்பதற்ப்பால் இந்த நாட்டில் இன அழிப்பே நடந்திருக்கின்றது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டாகவேண்டும். அதிலும் சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளார்களென தமிழ்தேசியக் (புலி)கூட்டமைப்பு கருதுவாக அவர் மேலும் தெரிவித்தார்.

எம்மினம் 13ம் நூற்றாண்டிலேயே (புலிகளின்)தனியரசு அமைத்துக் கொண்டு இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள், இன்று வரையில் அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமக்கென்றொரு, மொழி, கலை, கலாச்சாரம், வாழ்நிலம் ஆகியன இருக்கின்றன. நாம் சிறிய இனமாக இருக்கலாம், ஆனால் சிறுபான்மை இனமல்ல, இந்த மண்ணில் எமக்கு உரிமையிருக்கின்றது. சுவிட்சலாந்தில், பிரிட்டனில், ஜெனீவாவில் பல்வேறு இனங்கள், தனித்துவமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த இனங்களுக்குரிய முக்கியத்துவங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இங்கே நடப்பது வியப்பாகவும் விநோதமாகவும் இருக்கின்றது.

மறுபுறத்தே சமுக நீதி பற்றிப்பேசுபவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றார்கள். நேற்றும் கூட மூத்த அரசியல்வாதியொருவர் வீட்டினுள் மாட்டுத் தலைகள் வீசப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. எனவே எதுவுமே இங்கு மாற்றத்திற்குள்ளாகாத நிலையில் (புலி)கூட்டமைப்பு அனைத்துக்கும் எதிராக எந்தவிதமான உதவிகளும், பின்புலங்களும் இல்லாத சூழலில் போராடவேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. அது மக்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியினில் போராடும் என்றார்.

இதே வேளை (புலி)கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வது தொடர்பினில் மாற்று கருத்துக்கள் இருக்கப்போவதில்லை என மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்த அவர் அமெரிக்க விஜயம் மற்றும் ஜ.நா சந்திப்புக்கள் தொடர்பாக அங்கு விஜயம் செய்த குழுவினர் விபரங்களை கூறிய பின்னரே கருத்து கூறுவது பொருத்தமானதென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment