Friday, November 4, 2011

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 மீனவர்கள் விடுதலை!

Friday, November 04, 2011
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 மீனவர்கள் இன்றைய தினம் நாடு திரும்புவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த மீனவர்களுடன் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்த 6 மீனவப் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 6 மீனவப் படகுகளும் ஆந்திராவில் இருந்து இன்றைய தினம் நாட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லால் டி சில்வா தெரிவிக்கிறார்.

கைப்பற்றப்பட்ட படகுகளில் சென்றிருந்த மீனவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படகுகளை எடுத்து வருவதற்காக தலா இரண்டு மீனவர்கள் வீதம் இந்தியா சென்றுள்ளதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லால் டி சில்வா மேலும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment