Friday, November 4, 2011

கெரவலப்பிட்டியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

Friday, November 04, 2011
வத்தளை கெரவலப்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தேசிய வைத்தியசாலையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் வைத்து குறித்த இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய சொகுசு வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment