Friday, November 04, 2011பாகிஸ்தானுக்கு வெள்ள பெருக்கு நிவாரணமாக இலங்கை பெருந்தொகை பொருட்களை வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸினால் இந்த பொருட்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கான பாகிஸ்தானிய உர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேயிலை தூள், பிஸ்கட், படுக்கை விரிப்புகள், அப்பியாச கொப்பிகள், மற்றும் மருந்து பொருட்கள் என்பன இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தின் 21 மாவட்டங்களில் சுமார் 4 மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்தனர்.
அத்துடன் மில்லியன் கணக்காக வீடுகளும் வெள்ளத்தால் சேதமடைந்ததுடன், 2.5 மில்லியன் விவசாய உற்பத்திகளும் பாதிக்கப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment