Friday, November 4, 2011

எல்.எல்.ஆர்.சியின் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா!

Friday, November 04, 2011
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பார்ப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு வருட காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

அதன் இறுதி அறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போது இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் குறித்து அறிக்கை உயர் நிலை தரத்தை கொண்டதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து தொடர்பிலும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நூலண்ட் அமெரிக்காவின் அரசியல் துறை உதவிச் செயலாளர் விண்டி செர்மனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், செர்மனின் கருத்தும் கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை உயர்தரமாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக நூலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அறிக்கை தரமாக அமைந்திருப்பது மாத்திரமல்லாது அதனை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நூலண்ட் குறிப்பிட்டார்.

இதேவேளை, ராஜாங்க திணைக்களத்தின் ஆசிய பிராந்திய செயலாளர் ரொபட் ஓ பிளக் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து நிலமைகளை அவதானித்துள்ளனர்.

எனவே, இலங்கையில் விடயங்களில் முன்னேற்றம் காணப்படுவதை அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிளரி கிளிண்டன் அறிந்துள்ளதாகவும், அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment