Wednesday, November 23, 2011

விசேட பாராளுமன்ற செயற்குழுவை நியமிப்பதற்கு யோசனை!

Wednesday, November 23, 2011
இலங்கையர்கள் அனைவரும் ஓர் இனமாக வாழ்வதனை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியான நடைமுறைகளை சிபாரிசு செய்வதற்குரிய விசேட பாராளுமன்ற செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்று பிரதான இலக்குகளை அடைந்து கொள்வதற்கான நோக்கில் இந்த யோசனை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களிடையே சுமூக மற்றும் தனித்துவ பண்புகளை பாதுகாத்து கௌரவமாக வாழ்வதற்கான வழிவகைகளை உறுதிப்படுத்தும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கான தீர்வையில் உள்ளடக்குவது இதன் ஒரு நோக்கமாகும்.

இந்த விடயங்களை அரசியல் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு உள்ளது.

இந்த விசேட செயற்குழு தமக்குத் தேவையெனக் கருதும் எந்தவொரு நபரையும் அழைக்கவும், ஆவணமொன்றை பெற்றுக் கொள்வதற்கும் உரிமை வழங்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் அழைக்கப்படும் நபர்கள் வழங்கும் கருத்து மற்றும் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தும் அதிகாரம் செயற்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

செயற்குழுவில் 31 க்கு மேற்படாத உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment