Wednesday, November 23, 2011

புதுக்குடியிருப்பு பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

Wednesday, November 23, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புலியடி வீதியில் கடற்கரையோரமாக நேற்று (22.11.2011) பிற்பகல் சிதைவடைந்த சடலமொன்று கண்டெடுக்கப்படுள்ளது. இன்று பிற்பகல் காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தளத்திற்கு சென்ற பொலிசார் இச்சடலத்தை கண்டெடுத்ததுடன் ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.அமரசிங்க தலைமையில் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்திற்குப்பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் நெனவிரட்ன இந்த இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பொலிசாரின் வேண்டுகோளையடுத்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் ஸ்த்தளத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேதப்பரிசோதணையை மேற்கொள்ளுமாறும் அதற்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு எடுத்தச் செல்லுமாறும் நீதிபதி கருணாகரன் உத்தரவிட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன தெரிவித்தார்.

இச்சடலம் புதுக்குடியிருப்பு கடற்கரையோரம் இன்று பிற்பகள் 2மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் இச்சடலம் ஒரு பெண்ணின் சடலமாக இருக்கலாமென சந்தேகிப்பதாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். நீதவானின் உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதணைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

மளம ஓயாவில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

கலேவெல, பஹளவெவ, மளம ஓயாவில் இருந்து ஆண் ஒருவரிடம் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பான நீதிவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு - கொக்கிலாய் கடற்பரப்பில் உருக்குலைந்த சடலம் மீட்பு!

முல்லைத்தீவு - கொக்கிலாய் கடற்பரப்பில் அடையாளம் காண முடியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment