Wednesday, November 23, 2011வாஷிங்டன்: ஆக்க பூர்வ அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இந்திய சட்டங்கள் தங்கள் நாட்டின் நிறுவனங்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. ஆக்க பூர்வ அணுசக்தி துறையில் தங்கள் நாட்டின் நிறுவனங்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலன் கூறினார். தீர்வு காணப்பட விஷயங்களில் இதுவும் ஒன்று என்றும் இதனை இறுதி செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது போன்ற விஷயங்களுக்கு தீர்வுக் காண காலதாமதம் ஆகும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டு உள்ளது.
No comments:
Post a Comment