Wednesday, November 23, 2011

தென் பகுதி பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Wednesday, November 23, 2011
தென் பகுதி பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்து கண்காணிக்கப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 19ம் 20ம் திகதிகளில் யால மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கு இராணுவத் தளபதி நேரில் விஜயம் செய்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு படையினர் வழங்கி வரும் பங்களிப்பு குறித்து தென் பகுதி இராணுவ உயரதிகாரிகளுடன், இராணுவத் தளபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment