Wednesday, November 23, 2011போலி நாணயத்தாள்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த பாரியளவிலான மோசடி நடவடிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கெஸ்பேவ பகுதியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் விநியோகித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது அவரிடமிருந்த 20 போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள், நாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள், போலியான முறையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment