Wednesday, November 23, 2011

வெளிநாட்டு இராஜதந்திரிகள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் குழப்பம் ஏற்படுத்தியதது-விமல் வீரவன்ச!

Wednesday, November 23, 2011
வெளிநாட்டு இராஜதந்திரிகள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் குழப்பம் ஏற்படுத்தியதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.நாட்டின் எதிர்க்கட்சி பலவீனமானது என்பது மக்கள் புரிந்து கொண்டுள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தமது பலத்தை காண்பிக்க இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேகாலைப் பிரதேசத்தில் வீடமைப்பு திட்டமொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு - செலவுத் திட்ட யோசனை தொடர்பான உரை ஆரம்பிக்கப்பட்டதும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத்திட்டத்தின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ளாது எதிர்ப்பை வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெட்கமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment