Wednesday, November 23, 2011பாதுகாப்ப செலவுகளை குறைக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே 2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு செலவுகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சேர் ஜோன் கொதலாவெல பாதுகாப்பு கல்லூரி பட்டமளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முழுமையாக நீங்கியதாகக் கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளைக்கொடி குற்றச்சாட்டுக்களை சுமத்திய நபர்களைப் போன்றவர்கள் இன்னமும் எம்மிடையே இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவரணங்கள் மற்றும் ஏனைய வழிகளில் நாட்டுக்கும் நாட்டின் முக்கிய அதிகாரிகளுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
வெளிநாடுகளில் தமக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள், சுமத்தப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முழு நாட்டையுமே பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment