Wednesday, November 23, 2011சங்கொன்றைக் கொள்வனவு செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டர்.
ஹட்டன் பகுதியிலிருந்து வருகைதந்த ஒருவரிடம் சங்கை பெற்றுக்கொள்வதாக தெரிவித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதற்காக 25 இலட்சம் ரூபா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
பின்னர் குறித்த நபரை அச்சுறுத்தி, பணம் செலுத்தாது சங்கை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த வலம்புரி சங்கை பொலிஸார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment