



Wednesday, November 23, 2011அம்பாறை மாவட்டத்துக்கு இன்று விஜயம் செய்த இலங்கைக்கான் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கினை கல்முனை மாநகர முதல்வர் அம்பாறை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவதை காணலாம்
இலங்கையிலுள்ள பிரித்தானிய்யா நாட்டு உயர்ஸ்த்தானிகர் ஜோன் பிளேன் ரிங் நேற்று (22.11.2011) மாலை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.
இதன் போது காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பகுதிக்கு சென்ற உயர்ஸ்த்தானிகர் 1990 ம் ஆண்டு பள்ளிவாயல் படுகொலை இடம் பெற்ற காத்தான்குடி மீரா ஜும் ஆப்பள்ளிவாயலுக்கு சென்று அப்பள்ளிவாயலை பார்வையிட்டதுடன், அப் பள்ளிவாயல் ஜமாஅத்தார் சங்க பிரதிநிதியும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவருமான எம்.எஸ்.நசார் (அல்பா நசார்) உட்பட ஜமாஅத்தார் சங்க பிரதி நிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது பிரித்தானிய்யா தூதுவராலயத்தின் இரண்டாவது அரசியல் பிரிவுக்கான செயலாளரும் விஜயம் செய்திருந்தார்.
No comments:
Post a Comment