Sunday, November 13, 2011
நெல்லை : உயர் தொழில¢நுட்பம், பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பில்லை என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல¢லை மாவட்டம், கூடங்குளத்தில் முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் இறுதி நிலையில் உள்ளன. அணு உலையின் நிலை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் நேரடியாக விளக்கினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை நான்கு அடுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளை இயக்கவும், குளிர்விக்கவும் தூத்துக்குடி அனல்மின் நிலையம், செண்பகராமன்புதூர், அபிஷேகப்பட்டி பவர் கிரிட் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு 6 மெகாவாட் மின்சாரம் போதுமானது.
இயற்கை சீற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும் போது மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர்விக்க 4 டீசல் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு டீசல் ஜெனரேட்டரை 8 நாட்கள் இயக்க தேவையான டீசல் ஜெனரேட்டர்களில் உள்ளது. ஒரு ஜெனரேட்டர் செயல் இழந்தாலும் அடுத்தடுத்து நான்கு ஜெனரேட்டர்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டர்கள் அனைத்தும் செயல் இழந்தாலும் ‘இயற்கையான காற்றின் மூலம்
வெப்பத்தை குறைக்கும் திட்டம்‘ (‘பிஎச்ஆர்எஸ்‘) உலகிலேயே முதல் முறையாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அணு உலைகளை சுற்றிலும் பெல்ட் போன்ற வளையம் அமைக்கப்பட்டு 36 துளைகள் இடப்பட்டுள்ளன. இதன் வழியாக காற்று உள்ளே சென்று 12 வெப்ப மாற்றிகள் மூலம் அணு உலைகளை குளிர்விக்கும்.
அசாதாரண சூழ்நிலைகளில் அணு உலைய¤ன் இயக்கம் நின்றுவிடும். அதில் உள்ள யுரேனியம் உருகி அடியில் உள்ள ‘கோர் கேட்சர்‘ என்னும் பெட்டியில் தங்கிவிடும். எனவே கதிர்வீச்சுக்கான வாய்ப்பு இல்லை.
அணு உலையின் வெளிப்புற கட்டுமானம் 20 டன் எடையை தாங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதால் நில அதிர்வு, வெள்ளம், சுனாமி, விமான தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment