Sunday, November 13, 2011
தங்காலை வைத்தியசாலைக்குள் இன்று நண்பகல் அத்துமீறி நுழைந்த தங்காலை நகர சபைத் தலைவர் அனில் செல்வாஹன்ததியினால் குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் நிமல் அபேசிறிவர்த்தனவிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நகர சபையினால் குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையில் சேரும் குப்பைகளின் ஒருபகுதி நகர சபையினாலே அகற்றப்படும்.
எவ்வாறாயினும் குறித்த குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமை இந்தப் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது.
இன்று நண்பகல் வைத்தியசாலைக்குள் நுழைந்த நகர சபைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் நகர சபையால் குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பில் வைத்தியரிடம் விடயங்கள் கேட்டறியப்பட்டபோது, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தங்காலையில் தமது அதிகாரமே நிலவுவதாக தெரிவித்த நகர சபைத் தலைவர் நான் உன்னை இல்லாதொழிப்பேன் என வைத்திய அத்தியட்சகருக்கு தனது விரலை நீண்டி அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தங்காலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குறி்ப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் தங்காலை பொலிஸாரிடம் வினவியபோது, வைத்தியசாலையின் அத்தியட்சகர் மற்றும் நகர சபைத் தலைவர் ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாக இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக தங்காலை பொலிஸின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment